செவ்வாய், 12 மே, 2009

குழந்தை பருவம்

வாழ்க்கையில் சில தருணங்கள் மறக்க முடியாதவைகளாக அமைந்து விடும். அப்படிபட்ட ஒரு நிகழ்ச்சி தான் இது. இன்றும் என்னால் நம்பமுடியாத ஒன்று. நான் அப்பொழுது இரண்டாம் வகுப்பு. அப்பொழுதெல்லாம் நான் பள்ளிக்கு 12G பேருந்தில் செல்வேன். ( from west mambalam to Mylapore கொஞ்சம் english தலை காட்டும் - கண்டுக்காத)

காட்சி ஒன்று. அன்றைக்கும் அப்படி தான் என் அப்பா என்னை பேருந்தில் ஏற்றிவிட்டார். Schoolக்கு சென்றப்பின் தான் தெரியும், அன்னைக்கு school leaveனு. யாரொ ஒரு பெரிய தலை எதிர்பாராத விதமா, சிவலோக ப்ராப்தி அடைய அன்று பள்ளி விடுமுறை. நான் சும்மா இருக்காம, என் பாட்டி வீட்டுக்கு போக ஆசைப்பட்டு, அங்கிருந்த ஒரு traffic police மாமா கிட்ட 50 பைஸா லோன் வாங்கி கொண்டு ஜாலியாக பாட்டி வீட்டுக்கு கிளம்பினென்.

காட்சி இரண்டு. என் அம்மா வாசலில் என் தம்பிக்கு மம்மு ஊடிவிடும்போது, அந்த வழியாக என் school uniform உடன் ஒரு பொண்ணு போவதை பார்த்து, கொஞ்சம் பதட்டமாகி, அவளிடம் விசாரிக்க, school leave னு தெரிஞ்சது. சரி பொண்ணு தனியா மாட்டிப்பானு, எங்க அம்மா என் தம்பியோட schoolக்கு கிளம்பி வந்தாச்சு.

காட்சி மூன்று.என் மாமா/தாத்தானா எனக்கு ரொம்ப பிடிக்கும். School Leave விட்டா அங்கதான் போவேன். அதனால தான் school leave விட்டவுடனே பாட்டி வீட்டுக்கு போக நினைச்சேன்.

PS: I studied in Children Garden ( RK Salai Mylapore) and Patti was staying in Triplicane.

நான் பாட்டி வீட்டில நுழைஞ்சவுடனே, என் பாட்டிக்கு ரொம்ப அதிர்ச்சி. நீ இங்க எப்படி வந்த? ஸ்கூல் இல்லையான்னு என்னை பார்த்து கேட்டு கொண்டே என் தாத்தாவை கூப்பிட்டார். என் தாதாவுக்கு என்னை பார்த்து சந்தோஷம். நாங்கள் இருவரும் விளையாட ஆரம்பித்தோம். என் தாத்தா என்னிடம், அம்மா சாயங்காலம் வருவாளே என்ன பண்ண போறன்னு என் புத்திசாலி தனத்தை சோதித்தார். நான் உடனே, " அம்மா சாயங்காலம் தானே வருவா தாத்தா அப்போ ஸ்கூல் வாசல்ல போயி நின்னுடலாம்னு" பதில் சொன்னேன். ( ரொம்ப புத்திசாலி நான் !@@@) . தாதாவுக்கு பெருமை தாங்கள. விளையாட்டு continued

காட்சி நான்கு- என் அம்மா ஸ்கூலுக்கு இப்போவும் என்னை தேட ஆரம்பித்தார். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் தேடிவிட்டு என் அப்பாவுக்கு phone செய்தார். அப்பா அங்கிருந்து இருந்து கிளம்பி ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தார். ஒரு இடம் பாக்கி இல்லாமல் தேடிமுடித்து, போலீசில் கம்ப்ளைன்ட் செய்ய, நடந்த சம்பவங்களை கூற அவர்கள், என் போட்டோவையும், கம்ப்ளைன்ட் கடிதத்தையும் வாங்கி கொண்டு சாயங்காலம் வரை பார்த்துவிட்டு டிவியில் ஒளிபரப்பலாம் என்று என் அப்பா அம்மாவிடம் சமாதனம் கூறி அனுப்பிவிட்டனர். என் அம்மா அழுது கொண்டே ( இதற்க்கு பிற்காலத்தில் வருத்தப்பட்டது வேறு விஷயம்) தன் அம்மாவிடம் விஷயத்தை கூற வேண்டும் என்று தன பிடிக்க, இருவரும் திருவல்லிக்கேணி வந்தடைந்தனர் .

காட்சி ஐந்து-வீட்டுக்குள் நுழையும் பொது என் அப்பா அம்மா அந்த கண் கொள்ள காட்சி பார்த்து அதிர்ந்து நின்றனர். ஒன்றும் இல்லை நானும் தாவும் ஜாலியாக விளையாடி கொண்டிருந்தோம். என் அப்பா ஒரு பார்வை பார்த்தாரே! ஐயோ இன்றும் என்னால் மறக்க முடியாத ஒன்று. என்னை அடிக்க வந்து விட்டார். என் அம்மா என்னை கட்டிக்கொண்டு அவரை தடுக்க ( அம்மா செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆச்சு இல்ல) நான் அடியிலிருந்து தப்பித்தேன். என் அம்மா முத்த மழை பொழிந்தார்.

என் அப்பாவும் அம்மாவும் போலீஸ் station சென்று கம்ப்ளைன்ட் திரும்பி வாங்க, அங்கே அவர்கள் உங்கள் வீட்டில் அதே வைத்துக்கொண்டு ஏன் இப்படி எங்களை தொந்தரவு செய்தீர்கள் என்று அவர்கள் பங்குக்கு திட்டிவைக்க என் அப்பாவின் கோபம் இன்னும் இரண்டு மடங்கு அதிகரித்தது.

இன்று என் அப்பாவின் மாமா, என்னை பார்த்து " அந்த போலீஸ்க்கு ஐம்பது பைசா திருப்பி தந்தியா" ன்னு கேட்பார்.

நான் இன்னும் அதே ஏரியாவில் தான் குப்பை கொட்டறேன். என் ஆபீஸ் இப்போ RK சாலைல தான் இருக்கு, அதுவும் நான் படித்த அதே school எதிரில் இருக்கு .

Today if my son is not around for 1o minutes, i get worried so much. I am now imagining my parents situation on that day when I did this. I remember somebody saying" By the time you realise what your parents said was right you will have a kid who begins to think you are wrong" .

இன்னும் சில சம்பவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

3 கருத்துகள்:

  1. Supera irukku! Tamizhla eppadi ezhudhardhu commenta?
    - Sankar & Kalyani

    பதிலளிநீக்கு
  2. It is said that 'all is well that ends well'. but it is not true in this instance. My life would have been different and much better if the story had ended in a different note.

    ippadikku
    priyavirumbhi

    பதிலளிநீக்கு
  3. kalakkara priyaa..... nalla irundhudhu di... indha comedy matterlaam sonnadhe illiyae nee... and that statement "velai illaadha pozhudhu siridhu Blogkku eeya padum" nu sonnadhu... now do u understand how i managed to write 7 blogs, all after i joined maveric!!!! mudiyala, rest eduthu rest eduthu tired aaayiduchu... now by seeing all those daily chain of mails and this blog now, unakkum rommmmmmba tired aayiduchu nnu puriyudhu :-)

    and its news to me that ravi has a blog id... rukmani ammaal kudumbame ennamo dhideernu rajshri productions la vara aalunga maadhiri aayindu varudhu... ennamo ponga... rendu maasam oorla illengardhukkaaga ivlo maatramaa!!!

    பதிலளிநீக்கு